விஜய் 62′ படத்தின் டைட்டில் இவற்றில் ஒன்றா?

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு பின்னர் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்துள்ளது

ஏற்கனவே கசிந்த தகவலின்படி ‘கலப்பை’ என்ற டைட்டிலோடு தற்போது ‘ஏர்’, ‘விவசாயி’ ஆகிய டைட்டில்களும் பரிசீலனையில் உள்ளதாம். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதும், இதுவொரு விவசாயிகளின் பிரச்சனைகளை அலசும் படம் என்பதும் கிட்ட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் பிரபல நடிகை ஒருவர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *