shadow

விஜய், விஜய்தேவரகொண்டா படங்களில் ஸ்ரீதேவி மகள்

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான ‘தடக்’ என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவருக்கு தமிழ், தெலுங்கு படவுலகில் இருந்து வாய்ப்பு வந்துள்ளது.

விஜய், அட்லி இணையும் அடுத்த படத்தில் நாயகிகளில் ஒருவராக நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் தெலுங்கில் ‘அர்ஜுன்ரெட்டி’ புகழ் விஜய்தேவரகொண்டா நடிக்கவுள்ள அடுத்த படத்திலும் ஜான்வி கபூர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஜான்வி தரப்பில் கூறும்போது ‘‘தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் ஜான்விக்கு கதை சொல்லி உள்ளனர். தென்னிந்திய மொழிகளில் நடிக்கவும் ஜான்விக்கு விருப்பம் உள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வரும்’’ என்றனர்.

Leave a Reply