விஜய் டிவியின் இந்த டுவீட் எதற்கு?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 80 நாட்களை தொட்டுவிட்டது. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் ஆகும் போட்டியாளர்களுக்கு ஓட்டு போட்டு அதிக வாக்குகள் பெறுபவர்கள் காப்பாற்றப்பட்டு குறைந்த வாகுக்கள் பெறுபவர்கள் வெளியேறுவார்கள் என்பது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் சின்னக்குழந்தைக்கு கூட தெரியும்.

ஆனால் திடீரென விஜய் டிவி டுவிட்டர் பக்கத்தில், ‘கவனத்திற்கு : நீங்கள் பிக்பாஸ் போட்டியாளருக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் அவர்களைப் போட்டியில் தொடரவைக்கும். என்று டுவீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் பிக்பாஸ் பார்த்து கொண்டிருக்கும் மக்களுக்கு இது தெரியாதா?

எந்த வாரமும் இல்லாமல் இந்த வாரம் ஐஸ்வர்யா நாமினேஷனில் வந்துள்ளதால் விஜய் டிவி இந்த டுவீட்டை பதிவு செய்துள்ளதோ? என்ற சந்தேகம் பலருக்கு வந்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *