விஜய் சேதுபதியுடன் 2வது முறையாக இணைந்து நடிக்கும் சமந்தா

தியாகராஜன் குமாரராஜ இயக்கியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா முதல்முறையாக இணைந்து நடித்த நிலையில் தற்போது விஜய்சேதுபதியின் அடுத்த படத்திலும் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் டில்லி பிரசாத் இயக்கவுள்ள ‘துக்ளக் தர்பார்’ என்ற படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் சமந்தாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை தரும் அளவுக்கு வலுவான கேரக்டர் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிறுவனம் தான் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி, சமந்தா, துக்ளக், சூப்பர் டீலக்ஸ், vijay sethupathi, samantha, super deluxe

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *