விஜய், சூர்யா படங்களை இயக்கும் இளம் இயக்குனர்

மாநகரம் என்ற ஒரே படத்தை இயக்கி கோலிவுட் முழுவதும் புகழ் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 64 படத்தை இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து சூர்யாவின் படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளாராம்

நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் லோகேஷ் கூறிய ஒரு ஃபேண்டசி கதை மிகவும் பிடித்துவிட்டதாகவும், உலகம் முழுவதும் புகழ் பெற்ற காமிக கேரக்டரான ‘ஸ்டீல் க்ளா’ (Steel Claw) கேரக்டர் போன்ற ஒரு கேரக்டரில் முதல்முறையாக நடிக்க சூர்யா முடிவு செய்துவிட்டதாகவும் தெரிகிறது.

சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரை போற்று’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து அவர் லோகேஷ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *