shadow

விஜய், சூர்யாவுக்கு 23 நாள் கெடு கொடுத்த ரஜினி

விஜய் நடித்த ‘சர்கார்’ மற்றும் சூர்யா நடித்த ‘என்.ஜி.கே. ஆகிய திரைப்படங்கள் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ரஜினியின் ‘2.0’ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சர்கார்’ மற்றும் ‘என்.ஜி.கே’ 23 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடும் என தெரிகிறது.

‘2.0’ திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் சங்கர், கிராபிக்ஸ் பணிகள் விரைவில் முடிய இருப்பதாகவும், அதனால் படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படம் என்ற பெருமையை பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், சூர்யா, ரஜினிகாந்த், 2.0, ரிலீஸ் தேதி

2.0 released date announced

Leave a Reply