விஜய் கிச்சு கிச்சு முட்டிக்கிட்டு இருக்கார்: நாஞ்சில் சம்பத்

nanjil-sampathவிஜய் அரசியலுக்கு வருவது குறித்து சில ஆண்டுகளாக மறைமுகமாக பேசிக்கொண்டிருப்பதாகவும், பிகில் ஆடியோ விழாவில் அதுகுறித்து பேசுவாரா? என்றும் நாஞ்சில் சம்பத்திடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறியதாவது:

விஜய் ரொம்ப நாளா கிச்சு கிச்சு முட்டிக்கிட்டு இருக்கார். அரசியல் ஆசை இருந்தா நேரடியா சொல்லலாமே. ஏன் தயங்க வேண்டும்? ஆனால் முதலமைச்சராக நடிக்கவே மாட்டேன் என்று கூறியவர் அரசியலுக்கு வருவாரா? என்பது சந்தேகம் தான் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத அரசியல் களத்தில் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது உண்மைதான் என்றும், ஆனால் ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்திருப்பதால் இப்போதைக்கு விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply