shadow

விஜய், அட்லியை கமல் பாராட்டினாரா? கிண்டல் செய்தாரா?

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான இளையதளபதி விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த கமல்ஹாசன், விஜய்,அட்லியை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியதாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால் விஜய், அட்லியுடன் தோளில் கைகோர்த்து எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பின்னணியில் அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் போஸ்டர் இருந்தது. ‘மெர்சல்’ திரைப்படம் அபூர்வ சகோதரர்களின் காப்பி என்று பலர் விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் விஜய்யையும், அட்லியையும் கமல் கூப்பிட்டு பாராட்டினாரா? அல்லது கிண்டல் செய்தாரா? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய எஸ்.வி.சேகர், ‘விஜய் மற்றும் அட்லியை கூப்பிட்டு கமல் பாராட்டியபோது பின்னணியில் அபூர்வ சகோதரர்கள் போஸ்டரை வைத்ததுதான் கமலின் அற்புதமான புத்திசாலித்தனம்’ என்று கூறியுள்ளார்

Leave a Reply