shadow

விஜய்யை ஸ்போர்ட்ஸ்மேனாக மாற்றும் பிரபலம்

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படமான ‘தளபதி 63’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் விஜய் ஒரு ஸ்போர்ட்ஸ்மேனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே கசிந்துள்ள நிலையில் தற்போது கிடைத்துள்ள்ள தகவலின்படி அவருக்கு ஸ்போர்ட்ஸ்மேன் உடற்கட்டை கொண்டு வர சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக சென்னையை சேர்ந்த பிரபல ஜிம் நிறுவனத்தை நடத்தும் பிரபலம் ஒருவர் விஜய்க்கு பயிற்சி கொடுத்து வருவதாகவும் விரைவில் அவர் ஸ்போர்ட்ஸ்மேன் கெட்டப்பிற்கு தயாராகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

விஜய் ஜோடியாக சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் பணியில் உள்ளது. மேலும் இந்த படத்தில் ஒரு பிரபல நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க விவேக், யோகிபாபு ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

 

Leave a Reply