விஜய்யுடன் நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் பிரபல நடிகர்

நடிகர் விஜய் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பிரபல காமெடி நடிகர் ஒருவர் நடிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63; படத்தில் விவேக் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே நேர்’, ‘குஷி’, ‘பிரியமானவளே’, ‘பத்ரி’,. ‘ஷாஜஹான்’, ‘தமிழன்’, ‘யூத்’, ‘திருமலை’. ‘உதயா’, ‘ஆதி’, ‘குருவி’, போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்துள்ள விவேக் தற்போது மீண்டும் இணைந்துள்ளார்.

நேற்று லயோலா கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது ‘சத்தியமாக ‘தளபதி 63′ படத்தில் நான் நடிக்கின்றேன்’ என்று விவேக் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *