விஜய்யின் மாஸ்டர் படத்தில் திடீரென இணைந்த அருண்ராஜா காமராஜ்: பரபரப்பு தகவல்

விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு குட்டி கதை என்ற பாடல் நாளை வெளிவர உள்ளது என்பதும் தெரிந்ததே

விஜய் பாடிய இந்த பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ் என்பது தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த பைரவா படத்தில் இடம்பெற்ற ’வரலாம் வா’ என்ற பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்யின் அடுத்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மாஸ்டர் படத்தில் வரும் ஒரு பாடலை அவர் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply