shadow

விஜய்யின் ‘சர்கார்’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் படமாக்கப்பட்டு வரும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.

Leave a Reply