விஜய்யின் ‘சர்கார்’ படமும் காப்பியா?

ஏற்கனவே விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்கள் ‘சத்ரியன்’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள்’ படங்களின் காப்பி என சமூக வலைத்தள பயனாளிகள் கூறி வரும் நிலையில் தற்போது ‘சர்கார்’ படமும் காப்பி என நெட்டிசன்கள் வதந்தி ஒன்றை பரப்பி வருகின்றனர்.

பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவர் இரண்டு வேடங்களில் நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றின் காப்பி தான் ‘சர்கார்’ என்றும் தமிழுக்கேற்றவாறு இந்த படத்தில் சில மாறுதல்கள் மட்டும் செய்யப்பட்டிருப்பதாகவும் தெலுங்கில் டுவிட்டுக்கள் பதிவாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் சர்கார் படக்குழுவினர் இந்த தகவலை மறுத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் ஒரிஜினல் கதை தான் சர்கார் என்றும் இந்த படத்தின் எந்த படத்தின் காப்பியும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *