Chennai Today News

விஜய்யின் அடுத்த இரண்டு படங்களிலும் சமந்தா தான் ஹீரோயினா?

விஜய்யின் அடுத்த இரண்டு படங்களிலும் சமந்தா தான் ஹீரோயினா?

தளபதி விஜய் நடித்த ‘கத்தி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களிலும் சமந்தா நாயகியாக நடித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘விஜய் 63’ படத்திலும் சமந்தா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பவன்கல்யாண் நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் தெலுங்கு படம் ஒன்றின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் விரும்புகிறதாம். இந்த படத்தில் ஏற்கனவே சமந்தா நாயகியாக நடித்துள்ளதால் அவரே தமிழிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே விஜய் நடிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்களிலும் சமந்தாவே நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!