shadow

விஜய்யிடம் எனக்கு அவ்வளவாக நெருக்கமில்லை: சிம்பு

vijay-simbuஅஜித் ரசிகராகவும் விஜய்க்கு நெருக்கமானவராகவும் இருந்து வருபவர்களில் சிம்புவும் ஒருவர் என்று கூறுவதுண்டு. இந்த நிலையில் அஜித், விஜய் குறித்து சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனக்கு விஜய் அண்ணாவை பர்சனலாத் தெரியும், பிடிக்கும். சினிமாவில் எனக்கு அஜித் சாரைப் பிடிக்கும். நான் எப்பவும் வெளிப்படையா இருந்திருக்கேன்.

அந்த வி‌ஷயத்தை விஜய் அண்ணா தப்பா எடுத்துக்கிட்டதில்லை. அவருக்கு நான் உண்மையா தான் இருக்கேன். அது அவருக்குப் பிடிக்கும். அவர் நல்லா நடிச்சிட்டு இருக்கார். சமுதாயத்து மேல அக்கறை இருக்கு. பின்னாடி அவர் அரசியலுக்கு வரவும் வாய்ப்பு இருக்கு.

நான் எப்பவும் அவர்கிட்ட தம்பியா பழகியிருக்கேன். அவர் அப்போ யார்கிட்டேயும் அவ்வளவா பேசமாட்டார். நிகழ்ச்சிகள்ல பார்த்தா நான் மட்டும் அவர்கிட்ட போய் பேசுவேன். அப்புறம் ரெண்டு பேரும் அவ்வளவா நெருக்கமாகலை. ஆனா, எப்பவும் அவர் எனக்கு அண்ணன் மாதிரிதான்.’

இவ்வாறு நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

Leave a Reply