shadow

விஜய்சேதுபதி, விஷ்ணுவிஷால், விக்ராந்த்: மூன்று ‘வி’க்கள் இணையும் படம்

விஷ்ணுவிஷால் நடிக்கவுள்ள 18வது படத்தில் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி தருகிறார் விஜய்சேதுபதி. எனவே முதல்முறையாக விஜய்சேதுபதி, விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகிய மூவரும் ஒரு படத்தில் இணைகின்றனர்.

இந்த படத்தில் இசையமைக்க யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். யுவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், அந்த கனவு தற்போது நிறைவேறியதாகவும் விஷ்ணுவிஷால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *