விஜய்சேதுபதி, த்ரிஷாவை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய ’96’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் த்ரிஷா, ஜானு என்ற கேரக்டராகவே மாறியிருந்தார். அவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை பாராட்டியுதனது சமூக டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

96 திரைப்படம் அனைவரின் வாழ்க்கையிலும் சம்பந்தப்பட்டுள்ளது தான் மிகப்பெரிய சிறப்பு. இந்த படத்தில் விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் மிக அருமையாக நடித்துள்ளனர். த்ரிஷாவை திரையில் பார்க்கும்போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது. இயக்குனர் பிரேம்குமாருக்கும் படக்குழுவினர்களுக்கும் எனது பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் பாராட்டுக்கு நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *