விஜய்சேதுபதியுடன் நேருக்கு நேராக மோதும் தனுஷ்

கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ வெளிவரும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனுஷின் மாரி 2′ திரைப்படமும் கிட்டத்தட்ட அதே நாளில் வெளியாகவுள்ளது. இதன்மூலம் முதல்முறையாக விஜய்சேதுபதி, தனுஷ் படங்கள் மோதுகின்றன

தனுஷ் சற்றுமுன் தனது டுவிட்டரில் ‘மாரி 2’ படத்தின் பாடல்கள் நாளை வெளியாகும் என்றும் இந்த படம் டிசம்பர் 21ல் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ டிசம்பர் 20ல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டிசம்பர் 21ல் ஜெயம் ரவியின் அடங்கமறு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதே நாளில் சிவகார்த்திகேயனின் ‘கனா’ திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நான்கு இளம் நடிகர்கள் மோதும் நிலையில் யாருக்கு வெற்றி கிடைக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *