விஜய்சேதுபதியின் 2 படங்கள் ரிலீசுக்கு தயார்!
விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் ஏற்கனவே ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் நடித்து வந்த ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஒருபக்கம் நடந்து வந்ததால் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படமும் ரிலீசுக்கு தயாராகிவிடும் என கூறப்படுகிறது
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி,காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா, கார்த்திக் ராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்,
விஜய்சேதுபதி தற்போது துக்ளக் தர்பார், சிந்துபாத், சயிர நரசிம்மரெட்டி, கடைசி விவசாயி போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.