விஜய்சேதுபதியின் படத்தில் அரசியல் கட்சி தலைவரின் மகன்!

இயக்குனர் வ.கவுதமன் சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் அவர் கனிமொழி, தமிழிசை போட்டியிடும் தூத்துகுடி தொகுதியில் போட்டியிட்டு பின் திடீரென பின்வாங்கினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ திரைப்படத்தில் இயக்குனர் கவுதமனின் மகன் தமிழ் அழகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாராம். இந்த தகவலை இயக்குனர் சீனுராமசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *