விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்கள் உருவான நிலையில் தற்போது இதே கூட்டணியில் உருவாகியுள்ள அடுத்த படம் ‘சிந்துபாத்’. இந்த திரைப்படம் வரும் மே மாதம் 16ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய படத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘நானும் ரெளடிதான்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்

Leave a Reply