விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் அருண்விஜய் பட இயக்குனர்!

விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று இயக்குனர் வெங்கடகிருஷ்ண ரோஹ்நாத் இயக்கி வரும் இசை சம்பந்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதல்முறையாக அமலாபால் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக அருண்விஜய் நடித்த தடையற தாக்க’, ‘தடம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ்திருமேனி நடிக்கவுள்ளார். இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

விஜய்சேதுபதியின் 33வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து வருகிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *