shadow

விஜய்சேதுபதிக்கு சிலையை திறந்து வைத்த பிரபல இயக்குனர்

‘உதிரிப்பூக்கள்’ உள்ளிட்ட காலத்தால் அழியாத காவிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரன் நேற்று விஜய்சேதுபதியின் சிலையை திறந்து வைத்தார்.

நடிகர் விஜய்சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் இயக்குனர் மகேந்திரன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த ‘அய்யா ஆதிமூலம்’ கேரக்டரின் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலையை இயக்குனர் மகேந்திரன் திறந்து வைத்தார். அய்யா ஆதிமூலத்தின் உருவம் இந்த சிலையில் தத்ரூபமாக இருப்பதாக அனைவரும் பாராடினர்.

விஜய்சேதுபதி, அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.

Leave a Reply