விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை! நாசாவின் அதிர்ச்சி தகவல்

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க ஒரு சில நிமிடங்களுக்கு முன் திடீரென தகவல் தொடர்பை இழந்தது என்பது தெரிந்ததே. இருப்பினும் சந்திராயனின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து புகைப்படம் அனுப்பியது

அதனை அடுத்து விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்தனர். இந்த முயற்சிக்கு நாசாவும் உதவி செய்து வந்தது

இந்த நிலையில் தற்போது திடீரென விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது என்பதே தெரியவில்லை என்று நாசா கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செப்டம்பர் ஏழாம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் உள்ள ஒரு சிறிய உயரமான மென்மையான சமவெளியில் தரை இறங்கியிருக்கலாம் என்றும், விக்ரம் லண்டனுக்கு அது ஹார்ட் லேண்டிங் ஆக மாறி விட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது

தற்போது அந்த லேண்டர் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய முடியவில்லை என்றும் கூறியுள்ள நாசா அது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது டுவிட்டர் பதிவு செய்துள்ளது

நாசாவின் இந்த பதிவால் விக்ரம் லேண்டருக்கு என்ன ஆயிற்று என்பது குறித்த அதிர்ச்சி இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே உள்ளது. இருப்பினும் லேண்டர் எங்கே இருப்பது என்பதை கண்டுபிடிக்க தீவிர முயற்சி செய்யப்படும் என நாசா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply