விக்ரம் பாடலை பெண்களுக்கு சமர்ப்பணம் செய்த ஜிப்ரான்

விக்ரம் நடித்து வரும் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த தகவலை ஜிப்ரான் வெளியிட்டுள்ளார்.

‘தாரமே தாரமே’ என்ற தொடங்கும் இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளதாகவும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளதாகவும் இந்த பாடலை கம்போஸ் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பாடல் அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் என்றும் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், அக்சராஹாசன், லேனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *