விக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு அனுமதி கொடுத்த ரஜினிகாந்த்

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பதும் விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனமான ‘ரெளடி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவிருக்கும் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கின்றார். இந்த படத்திற்கு நெற்றிக்கண் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கே.பாலசந்தரின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளதால் இந்த படத்தின் டைட்டிலுக்கு அனுமதி கேட்ட விக்னேஷ் சிவனுக்கு அனுமதி கொடுத்து கவிதாலாயா நிறுவனமும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *