shadow

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ காலமானார். மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி காலமானார். மறைந்த எம்.எல்.ஏ ராதாமணியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார் . அவருடன் ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்..

எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை கூட சிந்திக்க வைக்கும் வகையில் சட்டப்பேரவையில் ராதாமணி பேசுவார் என்றும், அவரது மறைவு திமுக-விற்கு பேரிழப்பு என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி காலமானதை அடுத்து விரைவில் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும். ஏற்கனவே எச்.வசந்தகுமார் ராஜினாமா செய்ததால் நாங்குனேரி தொகுதி காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *