shadow

விஏஓ தேர்வு முடிவு வெளியீடு

vao813 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

2014 -15-ஆம் ஆண்டிற்கான 813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான எழுத்துத் தேர்வை 2016 பிப்ரவரி 28 -ஆம் தேதி நடத்தியது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

தேர்வு முடிவுகளை அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ //www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.

 

Leave a Reply