shadow

weekly rasipalan copyவாய்மையும், துாய்மையும் பின்பற்றி வாழும் மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ராகு, சுக்கிரன் நற்பலன் வழங்குவர்.மனதில் உற்சாகம், பேசும் வார்த்தை வசீகரம் நிறைந்திருக்கும்.எவருக்காகவும் தகுதிக்கு மீறிய பணப் பொறுப்பு ஏற்க வேண்டாம்.வீடு, வாகனத்தில் பயன்பாட்டு வசதி சீரான அளவில் கிடைக்கும்.புத்திரரின் கவனக் குறைவான செயலை சரி செய்து, கண்டிப்பதில் நிதானம் பின்பற்றவும்.உடல் நலம் பேணுவதில் தனிக் கவனம் கொள்வீர்கள்.இல்லறத் துணை வழிசார்ந்த உறவினர் கூடுதல் மதிப்பு, மரியாதை தருவர்.தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும்.பணியாளர், கூடுதல் பொறுப்புணர்வுடன் பணிபுரிவது நல்லது.பெண்கள், குடும்பத்தில் ஒற்றுமை வளர உரிய பங்காற்றுவர்.மாணவர்கள், ஆடம்பர செயல் தவிர்ப்பதால் நற்பெயர் கிடைக்கும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதுடன் பசுவுக்கு பழம், கீரை வழங்கலாம்.

புறச்சூழ்நிலை உணர்ந்து லட்சியம் நிறைவேற்றும் ரிஷப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சூரியன், ராகு, குரு தவிர மற்ற கிரகங்கள் அளப்பரிய நற்பலன் தருவர்.மனதில் உருவான திட்டம் புதிய முயற்சியுடன் செயல்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.புதிய வாகனம், நிலம் வாங்க நல்யோகம் உண்டு.புத்திரர், உங்கள் சொல் கேட்டு நடந்து பெருமை தேடித் தருவர். பணக் கடன், பிணி தொந்தரவு வெகுவாக குறையும்.இல்லறத் துணை, உங்களின் நல்ல குணம் பாராட்டுவார்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும்.பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.பெண்கள், குடும்ப பண வசதிக்கேற்ப புத்தாடை, அணிகலன் வாங்குவர்.மாணவர்கள், விரும்பிய பொருள் வாங்க பெற்றோர் உதவுவர்.

பரிகாரம்: மகாலட்சுமி தாயாரை வழிபடுவதுடன், சுமங்கலி பெண்ணுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கலாம்.

நம்பிக்கையுடன் பணிபுரிந்து, அதிக நன்மை பெறும் மிதுன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், குரு, சூரியன், சந்திரன் நற்பலன் தருகின்றனர்.கடந்த நாட்களில் சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதி நிறைவேற்றுவதில் அக்கரை கொள்வர். நற்பலன் கிடைத்து எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வளரும்.வீடு, வாகனத்தில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும்.புத்திரரின் சஞ்சலம் விலக தகுந்த ஆலோசனை சொல்வீர்கள்.எதிர்மறையாக பேசுபவரிடம் விலகுவது நல்லது.இல்லறத் துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார்.தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு உரிய பலன் பெற உதவும்.பணியாளர், நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்றவும்.பெண்கள், பணச் செலவில் சிக்கனம் மேற்கொள்வீர்கள்.மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால் படிப்பில் கவனம் வளரும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதுடன், ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கலாம்.

நற்பணி புரிந்து, சமூகத்தில் அந்தஸ்து பெறுகின்ற கடக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், ராகு, சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர்.வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வதால் நேரம், பணம் மிச்சப்படுத்தலாம்.சிலர், உங்களை அவமதிப்புடன் பேச உரிய தருணம் எதிர்பார்த்திருப்பர். இடம் தராமல் விலகுவது சிரமம் தவிர்க்கும்.வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும்.புத்திரர் கூர்மையான பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை சொல்லுங்கள்.சீரான ஓய்வு உடல் நலம் காக்கும். இல்லறத் துணை, உங்களின் மனக்கஷ்டம் தீர ஆறுதலாக இருப்பார்.தொழில் வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.பணியாளர், பணக் கடன் பெறுவதில் நிதானம் வேண்டும்.பெண்கள், அத்தியாவசித் தேவைக்கு மட்டும் பணம் செலவு செய்வர். மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபடக் கூடாது.

பரிகாரம்: சனி பகவானை வழிபடுவதுடன், வாத நோய் உள்ளவர் நலம் பெற, சிகிச்சைக்கு உதவலாம்

வாழ்வில் இன்பம், துன்பம் பக்குவ மனதுடன் ஏற்கும் சிம்ம ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய், சுக்கிரனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது.சோம்பல், விரக்தி மனப்பான்மை தவிர்ப்பதால் பணிகளில் ஆர்வமும், எதிர்பார்த்த பலனும் கிடைக்கும்.பேசுவதில் நிதானம் பின்பற்றுவதால் நற்பெயர் பாதுகாக்கலாம்.இளைய சகோதரர், உறுதுணையாக செயல்படுவார். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.பூர்வ சொத்தில் அளவான பண வரவு கிடைக்கும்.எதிரியால் உருவாகிற கெடு செயல் பலமிழக்கும்.இல்லறத் துணை கூடுதல் அன்பு, பாசம் கொள்வார்.தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் ஆதரவு கிடைத்து பண வரவு கூடும்.பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பு, பண வரவு பெறுவர்.பெண்கள் தாய் வீட்டு உதவி கிடைத்து மகிழ்வர்.மாணவர்கள், திட்டமிட்டு படித்து சிறந்த தேர்ச்சி விகிதம் பெறுவர்.

பரிகாரம்: பெருமாளை வழிபடுவதுடன் – சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து பிரசாதம் வழங்கலாம்.

தன் தகுதி உணர்ந்து, வாழ்க்கை நடத்தும் கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் உச்சம் பெற்ற குரு, உடன் இருக்கும் சுக்கிரன் நற்பலன் தருகின்றனர்.பண வரவு அதிகம் பெற புதிய வாய்ப்பு உருவாகும். முறையாக பயன்படுத்துவது அவசியம்.ஆர்வ மிகுதியால் பேசும் வார்த்தை பிறர் மனதை சங்கடப்படுத்தும். கவனம் தேவை.வீட்டில் ஒற்றுமை நிறைந்திருக்கும். புத்திரர் நற்செயல், நற்குணம் பின்பற்றுவர்.உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.இல்லறத் துணை நல்அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரி செய்ய வேண்டும்.பணியாளர், பணியிடத்தில் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.பெண்கள், குடும்ப உறுப்பினர் நலனில் கூடுதல் அக்கறை கொள்வர்.மாணவர்களின் படிப்புக்கு நண்பரின் உதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 16.08.14 நள்ளிரவு 12:01 முதல் 17.08.14 இரவு 11:08 மணி வரை.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், வடைமாலை சாற்றி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கலாம்.

காலத்தை பொன் போல மதித்து செயல்படும் துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு கேது, சூரியன், புதனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது.
சொல், பணியிடங்களில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு நிறைந்திருக்கும். ஆன்மிக வழிபாடு திட்டமிட்டபடி நிறைவேற்றலாம்.இளைய சகோதரர் கேட்ட உதவியை இயன்ற அளவில் தருவீர்கள்.வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்றவும்.புத்திரர் அறிவுத் திறன் வளர்க்க வழிகாட்டுவீர்கள்.உடல் ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத் துணையின் மனதில், உங்கள் மீதான நல்ணெ்ணம் குறைவு படாமல் இருக்க, கவனம் கொள்வது அவசியம்.தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும்.பணியாளர், பணி இலக்கு நிறைவேற்ற அனுகூல நிலை உருவாகும்.பெண்கள், உறவினர் குடும்ப விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம்.மாணவர்கள், வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்

சந்திராஷ்டமம்: 17.08.14 இரவு 11:09 முதல் 20.08.14 காலை 7:13 மணி வரை.

பரிகாரம்: சிவனை வழிபடுவதுடன் மிளகு, சீரகம், கலந்த பச்சரிசி பொங்கல் நிவேதனம் செய்து பிரசாதம் வழங்கலாம்.

மனசாட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகின்ற விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், சூரியன், புதன், ராகுவின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது.சிறு முயற்சியும் நல்லவிதமாக அமைந்து முழு அளவில் பலன் பெற்றுத் தரும்.விலகிச் சென்றவரும் உங்களின் நற்குணம் உணர்ந்து அன்பு பாராட்டுவர்.வீடு, வாகனத்தில் கூடுதல் வசதி பெற சில மாற்றம் செய்வீர்கள்.புத்திரரின் ஆன்மிகம் தொடர்பான கேள்விக்கு விளக்கம் தருவீர்கள்.உடல் நலம் பலம் பெற காலமுறை உணவுப் பழக்கம் பின்பற்றவும்.இல்லறத் துணை, நண்பருக்கு இணையாக கருத்து சொல்வார்.தொழில், வியாபாரத்தில் அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டு.பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.பெண்கள், உறவினர் குடும்ப மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடத்த உதவுவர்.மாணவர்கள், பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 20.08.14 காலை 7:14 முதல் 22.08.14 மாலை 5:10 மணி வரை.

பரிகாரம்: தன்வந்தரி பகவானை வழிபடுவதுடன், ஏழை முதியவரின் மருத்துவச் செலவுக்கு உதவலாம்.

தன்னால் இயலாத காரியங்களை தவிர்த்திடும் தனுசு ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு கடகத்தில் சுக்கிரன், துலாம் வீட்டில் சனி, செவ்வாய் அனுகூலமாக உள்ளனர்.வாழ்வுக்கு இடையூறாக உள்ள சூழ்நிலைகளை அகற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்வீர்கள்.நண்பர், உறவினரின் உதவி மனதில் நம்பிக்கை தரும்.வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும்.புத்திரரின் அறிவாற்றல், செயல் திறன் வளரும்.பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள்.இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும்.பணியாளர், பணித் திறன் வளர்ப்பதில் அக்கறை கொள்வர்.பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினர்களை உபசரிப்பர்.மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதல் கவனமுடன் பின்பற்ற வேண்டும்.

சந்திராஷ்டமம்: 22.08.14 மாலை 5:11 மணி முதல் 23.08.14 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபடுவதுடன், அவரின் பெயர் வைத்து, நல்லொழுக்கமுடன் வாழ்பவருக்கு உதவலாம்

கருணை மனதுடன் பிறருக்கு இயன்ற அளவில் உதவும் மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு கேது, குரு, புதனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது.பசு, பால் பாக்ய யோகம் அமைந்து குடும்பத்தில் செல்வ வளம் பெருகும்.தாய் வழி சொந்தம் கூடுதல் அன்பு பாராட்டுவர்.அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவுவதில் நிதானம் வேண்டும்.புத்திரர், தமது விருப்பம் நிறைவேற தாமதம் ஆவதால் வருத்தம் அடைவர்.எதிர் மனப்பாங்கு உள்ளவரும் உங்களை பொது இடங்களில் வரவேற்கிற சூழ்நிலை உருவாகும்.இல்லறத் துணையின் செயல் குறையை விமர்சிக்க வேண்டாம்.தொழில், வியாபாரம் செழிக்க மாற்று உபாயம் பின்பற்றவும்.இயந்திர பிரிவு பணியாளர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.குடும்பப் பெண்கள், உடல் நலத்தில் அக்கறை கொள்ளவும்.
மாணவர்கள், புதியவர்களிடம் தேவையற்ற கருத்து பேசக் கூடாது.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதுடன் அவல், பொரி, வெல்லம் கலந்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம்.

தன் குறையை சரி செய்வதில், தயக்கமின்றி செயல்படும் கும்ப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சந்திரன் மட்டுமே, ஓரளவு நற்பலன் வழங்குவார்.மற்ற கிரகங்கள் அத்தனையும் எதிர்மறையாக செயல்படுகின்றனர். இதனால், உங்களுக்கு நம்பகமாக இருந்தவரும் உதவ மறுக்கலாம். சுயமுயற்சி சில நன்மை பெற்றுத் தரும்.தொலை துாரப் பயணங்களை பாதுகாப்புடன் மேற்கொள்வது நல்லது. வீட்டுத் தேவை நிறைவேற்றுவதில் குளறுபடி ஏற்படலாம்.புத்திரர் விரக்தி மனப்பாங்குடன் விலகுவர். உங்களின் கவனக்குறைவான செயல், எதிரிக்கு ஒருவாய்ப்பாக அமைந்துவிட வேண்டாம்.இல்லறத் துணை சில படிப்பினையை எதிர்கொள்வார்.தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும்.பணியாளர், தமது கடமை உணர்ந்து செயல்படுவது நற்பெயரை பாதுகாக்க உதவும்.பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.மாணவர்கள், சீராக ஓய்வு எடுப்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

பரிகாரம்: கருடாழ்வாரை வழிபடுவதுடன், பறவைகளுக்கு தானியம் வைக்கலாம்.

கடின உழைப்பினால் வாழ்வில் செல்வ வளம் பெறும் மீன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு புதன், குரு, சுக்கிரன், சூரியன் அனுகூல அமர்வில் உள்ளனர்.
எந்த செயலையும் ஆராய்ச்சி மனப்பாங்குடன் மேற்கொள்வீர்கள். வார்த்தைகளில் நிதானம் சிரமம் தவிர்க்க உதவும்.உடன் பிறந்தவர் கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்துகொள்வர். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.புத்திரர், உங்கள் சொல்படி நடந்து பெருமைத் தேடித் தருவர். வழக்கு, விவகாரங்களில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.இல்லறத் துணையின் சேமிப்பு பணம் சுபச் செலவுக்கு பயன்படும்.தொழில், வியாபாரம் செழித்து வளர அனுகூலகாரணி பலம் பெறும்.பணியாளர் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர்.பெண்கள், குடும்ப நலன் சிறக்க தேவையான நற்செயல்களில் கவனம் கொள்வர்.மாணவர், ஞாபகத் திறன் வளர்த்து படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதுடன், தந்தையின் தேவை அறிந்து நிறைவேற்றலாம்.

 

Leave a Reply