வாய்ப்பு கிடைத்தால் பிரதமராக ஸ்டாலின் வரலாம்!- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தமிழக முதல்வராக வர வாய்ப்பு இருந்ததாக எந்த அரசியல் விமர்சகர்களும் எதிர்பார்த்ததில்லை. ஆனால் அதிர்ஷ்டம் மற்றும் அரசியல் சூழல் காரணமாக இருவரும் முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட்டனர்.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தமிழக முதல்வர் பதவியில் உட்கார பகீரத முயற்சி எடுத்து வரும் மு.க.ஸ்டாலினால் அதிகபட்சம் துணை முதல்வர் பதவியில் மட்டுமே அமர முடிந்தது. இனிவரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறுவது சந்தேகம் என்று கூறப்படுவதால் ஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீராகவே போய்விட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் வாய்ப்பு கிடைத்தால் பிரதமராக ஸ்டாலின் வரலாம் என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இளங்கோவனின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *