வாட்டர் பாட்டிலுக்கு என தனி குப்பைத்தொட்டி வைத்த கோவை நிர்வாகம்

பிளாஸ்டிக் பயன்பாடு ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பிளாஸ்டிக் கழிவுகளினால் பல சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அவற்றில் முக்கியமானது பிளாஸ்டிக் கேன்களில் விற்பனை செய்யப்படும் வாட்டர் கேன்கள். இந்த வாட்டர் கேன்களில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டு பொதுமக்கள் அப்படியே வெளியிலும் குப்பைத்தொட்டியிலும் போட்டுவிடுவதால் இந்த கழிவுகள் பெரும் பிரச்சனையாகிறது

இந்த நிலையில் கோவை பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை போடுவதற்கு என தனியாக ஒரு குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படும் வாட்டர் பாட்டில்கள் மறுசுழற்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply