shadow

வாட்ச்மேன் படத்தின் புரோமோ வெளியீடு எப்போது?

வரும் பிப்ரவரி மாதம் ஜி.வி.பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் , ஐங்கரன் மற்றும் 100% காதல் என மூன்று படங்களும் ஒரே மாதத்தில் வெளியாக உள்ளன. இந்த நிலையில் அவர் நடித்த மற்றொரு படத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வருகின்ற இந்த படத்திற்கு வாட்ச்மேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் புரோமோ பாடல் நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அருண் மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியாக உள்ள இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு மற்றும் ராஜ் அர்ஜுன் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் நடித்தும் இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவும் அந்தோணி இப்படத்திற்கு படத்தொகுப்பும் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *