வாஜ்பாய் உடலுக்கு அண்டை நாட்டு தலைவர்கள் இறுதியஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமான நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் வாஜ்பாயின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி, அவரது வளர்ப்பு மகளிடம் வழங்கப்பட்டது

வாஜ்பாய் உடலுக்கு ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், வங்கதேச அமைச்சர் அபுல் ஹாசன் மகமூத் அலி, இலங்கை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா, நேபாள அமைச்சர் பிரதீப் குமார், பூடான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்

அதேபோல் வாஜ்பாய் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, திமுக சார்பில் அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *