shadow

10முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜேஅப்துல் கலாம், ‘எ மேனிபெஸ்ட்டோ பார் சேஞ்ச்’ (மாற்றத்துக்கான அறிக்கை) என்ற புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். ஹார்பர் காலின்ஸ் இந்தியா என்ற நிறுவனம் இந்த புத்தகைத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 5 ஆண்டுகள்  பாராளுமன்ற ஜனநாயகம் குறித்து  ஆராய்ச்சி செய்து, இந்த புத்தகத்தை அப்துல் கலாம் எழுதியுள்ளதாக அவருடைய உதவியாளர் கூறியுள்ளார்.

‘புதிய சுதந்திரமான லோக்பால் சட்டம் நாட்டில் அமல்படுத்தவேண்டும் என்றும், அதன்மூலம் சுதந்திரமான ஊழல் கண்காணிப்பு ஆணையம், சுதந்திரமான சி.பி.ஐ., ஆகியவைகள் சிறப்புடன் செயல்பட்டு நாட்டின் ஊழல் வழக்குகளை பாரபட்சமின்றி விசாரிக்க தனி கோர்ட்டுகள் அமைக்க வழி வகுக்க வேண்டும்’ என்றும் அப்துல்கலாம்  இந்த புத்தகத்தில் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

தேர்தலின்போது, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது கூடிய விரைவில் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ள அப்துல்கலாம், செல்போன் வைத்திருக்கிற வாக்காளர்கள், அதன் மூலமே அவர்களது தேசிய அடையாள அட்டை அல்லது அரசு அடையாள அட்டையின் எண்களை குறிப்பிட்டு தங்களது தொகுதியில், விரும்புகிற வாக்காளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நாட்டின் எந்த பகுதியில் ஒரு வாக்காளர் இருந்தாலும், அவருடைய வாக்கை அவரது தொகுதிக்கு செலுத்தும் வசதி விரைவில் வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளர்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Leave a Reply