வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? இன்று ஒரு வாய்ப்பு

election commissionவாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மற்றும் வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் செப்டம்பர் 9 மற்றும் 23-ஆம் தேதி, அடுத்த மாதம் 7 மற்றும் 14-ஆம் தேதி ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் 3754 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

மேலும் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒரே தொகுதிக்குள் இடம் மாறி இருந்தால் படிவம் ‘8ஏ’ வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த சிறப்பு முகாம்களில், பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து கொள்ள விண்ணப்பிக்கலாம். மற்ற நாட்களில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *