வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு: சட்ட அமைச்சகம் பரிசீலனை

ஆதார் அட்டையுடன் கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களையும் இணைத்துவிட்ட நிலையில் வாக்காளர் அட்டையை மட்டும் இணைக்க அரசும், அரசியல் கட்சிகளும் ஆழ்ந்த யோசனையில் உள்ளன. இந்த இரண்டையும் இணைத்துவிட்டால் கள்ள ஓட்டு சாத்தியமே இல்லை என்பதால் தான் இந்த யோசனை

இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சட்டரீதியான ஆதரவு கேட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஒரே வாக்காளர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தடுக்க ஒரே வழி இந்த இரண்டையும் இணைப்பதுதான் என பல வருடங்களாக சமூக ஆர்வலர்கள் கூறி வரும் நிலையில் இனிமேலாவாது வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க அரசு பரிசீலனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *