வாகனப் பதிவு விவரங்களை அறிய ஒரு ஆப்ஸ்.

1வாகன எண்ணைக் கொண்டு அதன் பதிவு விவரங்களை அறிவதை எளிதாக்கும் வகையில் ‘கார் இன்ஃபோ வெஹிகில் ரிஜிஸ்ட்ரேஷன்’ எனும் செயலி அறிமுகம் ஆகியுள்ளது. இந்தச் செயலியில், வாகன எண்ணை டைப் செய்தால், உரிமையாளரின் பெயர், பதிவு செய்யப்பட்ட நகரம், இன்ஜின் எண் உள்ளிட்ட தகவல்களை அளிக்கிறது. இவை எல்லாம் பொதுவெளியில் உள்ள தகவல்கள்தான் என்றாலும் இவற்றை ஒரே கிளிக்கில் எளிதில் கிடைக்கச் செய்கிறது இந்தச் செயலி.

பயன்படுத்திய கார் வாங்க விரும்புகிறவர்கள் முதல், விபத்து போன்ற சம்பவங்களில் கார் பதிவுத் தகவல்களை அறிய விரும்புகிறவர்கள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். ஆண்ட்ராடு மற்றும் ஐபோன்களில் இது செயல்படுகிறது. கார் பதிவு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.cuvora.carinfo

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *