shadow

’வலிமை’ படத்தில் இணைந்தாரா யோகிபாபு? பரபரப்பு டுவீட்

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரச்சனை என ஒரு சில வதந்திகள் எழுந்து வந்தாலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பில் எந்த சிக்கலும் இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்

இருப்பினும் ’வலிமை’ படத்தின் கதாநாயகி யார்? வில்லன் யார்? போன்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ’வலிமை’ படத்தின் அப்டேட் வேண்டும் என்று அவ்வப்போது ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் தற்போது மிக தீவிரமாக கேட்டதோடு இதுகுறித்த ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

இந்த நிலையில் ’வலிமை’ படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது இதுகுறித்து யோகிபாபு பெயரில் இருக்கும் டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பதிவு யோகிபாபு நேரடியாக பதிவு செய்தாரா என்பதை உறுதி செய்யப்படவில்லை. அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்தால் மட்டுமே யோகிபாபு இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்படும் ஏற்கனவே அஜித் நடித்த வேதாளம், வீரம், விஸ்வாசம் உள்பட ஒருசில படங்களில் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *