வரும் தேர்தலில் இதுதான் புதிய கூட்டணியா? பரபரப்பு தகவல்

வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியும் உடையும் என்றும் புதிய கூட்டணி எப்படி உருவாகும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளதை தற்போது பார்ப்போம்

ரஜினி மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து கூட்டணி அமைக்கும். இந்த கூட்டணியில் 70% ரஜினி கட்சியும் 30% காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும்

அதேபோல் அதிமுகவுடன் விசிக, இடது சாரிகள் கூட்டணி சேரும். மேலும் பாஜகவுடன் தமாக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேரும்

திமுக கூட்டணியில் மதிமுக மட்டுமே இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சீமான், கமல், டிடிவி தினகரன் ஆகியோர் தனித்து போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளன என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply