வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாச நீடிப்பு இல்லை!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாச நீடிப்பு இல்லை!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு கிடையாது என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 30ஆம் தேதி அதாவது வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையோடு முடிகிறது என்றும் வருமான வரித்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் அறிக்கை போலியானது என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. எனவே இந்த ஆண்டு வருமான வரி கணக்கை இன்னும் தாக்கல் செய்யாதவர்கள் நாளைக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.