வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்: ஜிவி பிரகாஷ் கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று தூத்துகுடியில் பேரணி நடத்திய அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களை கொன்று, வரலாற்றுப் பிழை செய்துவிட்டீர்கள் என்று நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.

சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்… வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்.

சுவாசிக்க தூய்மையான காற்றை கேட்டவர்களின் மூச்சை நிறுத்திவிட்டது இந்த சனநாயகம்.’

இவ்வாறு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *