வரலட்சுமியின் ‘ நீயா 2 ‘ ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

1979 ல் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீப்ரியா ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த படம் நீயா . கணவனை கொன்ற கயவர்களை இச்சாதாரி பாம்பு பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் ‘ நீயா ‘ படத்தின் இரண்டாம் பாகமாக ‘ நீயா 2 ‘ படம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது .

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது . இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்களை பார்க்கும் போது ‘ நீயா ‘ படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜெய் , வரலக்ஷ்மி சரத்குமார் , ராய் லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எல்.சுரேஷ் இயக்குகிறார் . ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . ராஜவேல் மாணிக்கம் ஒளிப்பதிவாளராகவும் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பாளராகவும் உள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *