வரலட்சுமியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

நடிகை வரலட்சுமி நடித்த பாம்பு திரைப்படமான ‘நீயா’ வரும் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளிப்போயுள்ளது

விநியோகிஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘நீயா 2’ திரைப்படம் மே 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஜெய், வரலட்சுமி, கேதரின் தெரசா , ராய்லட்சுமி, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எல்.சுரேஷ் இயக்கியுள்ளார். ஷபீர் இசையில் ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Leave a Reply