shadow

வயிற்றுப்பிடிப்புவ் வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

வயிற்றுவலி, வயிற்றுப் பிடிப்பு, வயிற்று எரிச்சல் எனத் தொடங்கும் பிரச்சனைகள் வேறு நோய்களின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம்.

வயிற்றுவலி, வயிற்றுப் பிடிப்பு, வயிற்று எரிச்சல் எனத் தொடங்கும் பிரச்சனைகள் வேறு நோய்களின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். மாதவிடாய் நேர வயிற்றுப்பிடிப்பு, தவறான உணவுப் பழக்கம், அதிகப்படியான மனஅழுத்தம், உடல் உஷ்ணத்தால் ஏற்படுவது என வயிற்றுப் பிடிப்புகளுக்கான காரணங்கள் பல.

சிறிது நேரம் மட்டும் வலி வந்தால் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். இது தசைகளைச் சற்றுத் தளர்த்தி வலியைக் குறைக்கும். உட்கார்ந்திருக்கும் / படுத்திருக்கும் நிலையை மாற்றிப்பாருங்கள். வயிற்றுத் தசைகளைச் சற்று லேசாக்கிப் படுக்கலாம்.

இறுக்கமான ஆடை அணிந்திருந்தால், அதையும் தளர்த்திவிடுங்கள். உடனடி நிவாரணத்துக்குச் சாதம் வடித்த நீருடன் தேன் கலந்து குடிக்கலாம்; அல்லது ஒரு கப் தயிர் சாப்பிடலாம்.

தொடர்ந்து வலி வந்தால் உணவுப்பழக்கங்களில் மாற்றம் தேவை என உணருங்கள். காரமான உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

கொழுப்புச்சத்து அதிகமுள்ள பொருள்களுக்கு ‘குட் பை’ சொல்லி விடலாம். துரித உணவுகளைத் தூர வைத்துவிடலாம்.

வயிற்றுத் தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனையுடன் செய்யலாம். சுய மருத்துவம் வேண்டாம். மருத்துவரின் பரிந்துரையின்றி வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட வேண்டாம்.

நீண்ட நாள்களுக்கு வயிற்றுப்பிடிப்பு இருந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம்.

சாதாரண வயிற்றுப் பிடிப்புதானே என அலட்சியம் செய்யாமல், நோயின் அடுத்த நிலைக்கான அலாரமாக இருக்கலாம் என்பதை உணருங்கள்.

எவ்வளவு நேரமாக வலிக்கிறது, எந்த இடத்தில் வலிக்கிறது, வலி வருவதற்கு முன்னர் என்ன உணவைச் சாப்பிட்டோம் என ஒருமுறை சுயபரிசோதனை செய்யவேண்டும்.

Leave a Reply