வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: பொதுமக்களே உஷார்!

வங்கிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை உள்ளதால் பொதுமக்கள் முன்கூட்டியே தங்களுக்கு தேவையான பணத்தை வங்கி மூலமோ, ஏடிஎம் மூலமோ எடுத்து வைத்துக்கொண்டு உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், 10 பொது துறை வங்கிகள் இணைக்கப்படும் என சமீபத்தில் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே வங்கி ஊழியர்கள் வேலை செய்த நிலையில் தற்போது மீண்டும் வங்கி அதிகாரிகள் செப்டம்பர் 26 வியாழன் மற்றும் 27 வெள்ளி ஆகிய இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும் செப்டம்பர் 28ம் தேதி, நான்காவது சனிக்கிழமை, 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் நிலை உள்ளது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள், முன்னதாகவே திட்டமிட்டு வங்கி பணிகளை மேற்கொள்ளும்படியும், ஏ.டி.எம்களிலும் தேவையான பணத்தை முன்கூட்டியே எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply