லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது கொடுத்த சாக்சி

பிக்பாஸ் இன்று விருது கொடுக்கும் நிகழ்வு ஒன்று நடந்து வருவதாக முதல் புரமோ வீடியோவில் உள்ளது. அதில் லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது வழங்கப்படுவதாக மோகன் வைத்யா அறிவிக்க, இதனால் லாஸ்லியா, கவின் அதிர்ச்சி அடைகின்றனர்.

சாக்சியிடம் இருந்து பச்சோந்தி விருதை பெறும் லாஸ்லியா இந்த விருது தனக்கு வேண்டாம் என்று கோபத்துடன் தூக்கி எறிகிறார். இதனால் மோகன் வைத்யா கோபம் அடைகிறார். சாக்சி இனி நான் யாருக்கும் விருது கொடுக்க முடியாது என்று கோபத்துடன் கூறுகிறார்

லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது கொடுத்து அவமதித்ததால் டுவிட்டரில் அவரது ஆர்மியினர் பொங்கி எழுந்து பிக்பாஸூக்கு எதிராக டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply