லட்சுமிமேனன் செய்தி குறித்த வதந்திக்கு விளக்கம் அளித்த இயக்குனர்

தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தை சமீபத்தில் ‘ராட்சசன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படமும் ஒரு அதிரடி த்ரில் படம் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கவுள்ளதாக ஒருசில இணையதளங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தி வதந்தி என்றும், இந்த படத்தின் நாயகி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் இயக்குனர் ராம்குமார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: ‘வணக்கம். ராட்சசனுக்கு பிறகு தனுஷ் அவர்களுடனான திரைப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். அதற்க்குள்ளாகவே கதை நாயகி குறித்த தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி’ என்று கூறியுள்ளார்

மேலும் தனுஷ் தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘மாரி 2’ படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *