ரோஹிங்கா முஸ்லீம்களுக்கும் ஐஎஸ் இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம்: அதிர்ச்சி தகவல்

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் பயிற்றுவிக்கப்பட்ட 2000 ரொஹிங்கியா முஸ்லிம்ள் நாகாலாந்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

நாகாலாந்து காவல்துறையின் நுண்ணறிவு படையினர் நடத்திய விசாரணையில் சுமார் 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் நாகாலாந்திற்குள் நுழைந்துள்ளனர் என்றும் அவர்கள் 2000 ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு பயங்கரவாதப் பயற்சி அளித்து வருகின்றனர் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

திமாபூரில் உள்ள முஸ்லிம் தலைவர் இமாம் மூலம் அவர்கள் வங்க தேசத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களைப் பெருகின்றனர். ஹெப்ரான், கெஹோய் உள்ளிட்ட இடங்களில் உள்ள நாகாலாந்து ராணுவ முகாம்களை தாக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ரொஹிங்கயர்களுக்கு தற்கொலைத் தாக்குதல், குண்டு வீச்சு போன்றவற்றில் பயற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக திமாபூரில் தீவிர சோதனை நடத்த நுண்ணறிவுப் படை முடிவு செய்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *