ரூ.96க்கு தினமும் 10ஜிபி டேட்டா: பி.எஸ்.என்.எல் அதிரடி திட்டம்

கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்பட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளும் வகையில் ஒருசில அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. ஜியோ உள்பட பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தரும் சலுகைகளால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மாறி வருவதை அடுத்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.96 மற்றும் ரூ.236க்கு 2 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

இதன்படி இனி ரூ.96-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 10 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு 280 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். அதேபோல ரூ.236-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 10 ஜிபி வீதம் 84 நாட்களுக்கு 840 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *