ரூ.5000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 ஆண்ட்ராய்டு நௌக்கட் ஸ்மார்ட்போன்கள்

கூகுளின் ஆண்ட்ராய்டு 8.0 அப்டேட் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து வெளியாகும் சில விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் இந்த அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே ஆண்ட்ராய்டு 8.0 டெவலப்பர் பிரீவியூ வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் ஆண்ட்ராய்டு 7.0 மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 பழைய இயங்குதளங்களாகி விடும். இதனால் பட்ஜெட் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ஆண்ட்ராய்டு 8.0 வழங்கப்படும்.

இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் ரூ.3,999 விலையில் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட சாதனங்களை வெளியிட்டுள்ளது. இதே போன்று ரூ.5,000 விலையில் கிடைக்கும் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் புதிய இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

இங்கு ரூ.5000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பார்ப்போம்.

லாவா ஏ44 சிறப்பம்சங்கள்

4.0 இன்ச் 480×800 பிக்சல் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி
5 எம்பி பிரைமரி கேமரா
2 எம்பி செல்ஃபி கேமரா
1500 எம்ஏஎச் பேட்டரி

கார்பன் ஏ40 சிறப்பம்சங்கள்

4.0 இன்ச் 480×800 பிக்சல் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 எம்பி பிரைமரி கேமரா
0.3 எம்பி செல்ஃபி கேமரா
1400 எம்ஏஎச் பேட்டரி

சான்சுயி ஹாரிசன் 2 சிறப்பம்சங்கள்

5.0 இன்ச் 1280×720 பிக்சல் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
8 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி செல்ஃபி கேமரா
2450 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா ஏ4 சிறப்பம்சங்கள்

4.0 இன்ச் 480×800 பிக்சல் டிஸ்ப்ளே
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி
5 எம்பி பிரைமரி கேமரா
2 எம்பி செல்ஃபி கேமரா
1750 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா செனித் சிறப்பம்சங்கள்

5.0 இன்ச் FWVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 ஜிபி இன்டெர்னல் மெமரி
5 எம்பி பிரைமரி கேமரா
2 எம்பி செல்ஃபி கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *